உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை.யில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி திடீர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      தமிழகம்
Balakrishna Reddy 2017 10 10 0

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள உட்கட்டமைப்பு வசதிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்னண் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு வசதிகளான பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சிக் கூடம், நூலகம், கலையரங்கம், வகுப்பறைகள், விடுதியின் கூடுதல் கட்டிடம், உணவுக் கூடம், விளையாட்டு முகாம் மையம் ஆகியவற்றைப் பார்வையிட்டு தற்போதைய பணிகளின் நிலை குறித்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆய்வு செய்தார். 

மேலும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகக்கழகத்தில் அமைக்கப்பட்டு வரும் விளையாட்டு வசதிகளான சைக்கிள் வேலோடிரம், படகு போட்டிகளுக்கான பயிற்சியிடம், நீர்விளையாட்டு மையம், பல்வகை உள்விளையாட்டு அரங்கம், 400 மீட்டர் சிந்தடிக் தடகள ஓடுபாதை ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விளையாட்டு வீரர்களுக்கான உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகளை மேம்படுத்திட மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் தரமானதாகவும், சிறப்பானதாகவும் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கட்டுமான பொறியாளர்களுக்கும், தொழில் நுட்ப வல்லுநர்களுக்கும், அலுவலர்களுக்கும் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு முதன்மைச் செயலர் தீரஜ்குமார், தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர்,விளையாட்டுப் பல்கலைக்கழக பதிவாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து