பா.ஜ.க சித்தாந்தத்தைத் தான் எதிர்க்கிறேன் ஒழிக்க நினைக்கவில்லை: ராகுல்காந்தி

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      இந்தியா
rahul 2017 10 10

வதோதரா :  பா.ஜ.க.வின் சித்தாந்தத்தைத் தான் எதிர்க்கிறேன், அவர்களை இந்தியாவில் இருந்தே ஒழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே இந்திய மக்களின் வெளிப்பாடுகள். நான் பா.ஜ.க.விற்கு எதிராகப் போராடுகிறேன். ஆனால் எப்போதுமே பா.ஜ.க.வை நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை - ராகுல்காந்தி

குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ராகுல்காந்தி அங்கு தொழில்முனைவோர் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது எங்களின் கண்களைத் திறந்து விட்டது, இதற்காக பா.ஜ.க.விற்குத் தான் நன்றி தெரிவிக்க வேண்டும். காங்கிரஸ், பா.ஜ.க இரண்டுமே இந்திய மக்களின் வெளிப்பாடுகள். நான் பா.ஜ.க.விற்கு எதிராகப் போராடுகிறேன். ஆனால் எப்போதுமே பா.ஜ.க.வை நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை, அது மக்களின் எண்ண ஓட்டம்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி தான் எனது கண்களைத் திறந்தது. பா.ஜ.க என் மீது கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் நடத்தியது, ஆனால் இவை எல்லாம் எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக அமைந்துள்ளன. வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்ற காரணத்திற்காகவே நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று சொன்ன பாஜகவின் உறுதி என்னவாயிற்று. நாள்தோறும் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புக்கான சந்தையில் நுழைகின்றனர், ஆனால் ஒரு நாளைக்கு 450 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நாள்தோறும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தரவில்லை என்றால் மக்களின் கோபம் விஸ்வரூபம் எடுக்கும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து