முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல்கள் வேண்டுமா? - தொலைபேசி எண்களை வெளியிட்டது அரசு

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த கூடுதல் தகவல்களை பெறுவதற்கும் உரிய சிகிச்சை பெறுவதற்கும் இலவச அழைப்பு எண் உள்ளிட்ட தொலைபேசி எண்களை அரசு வெளியிட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 02.10.2017 அன்று நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் வாரம்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து பள்ளிகளில் டெங்கு தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. நாளிதழ் விளம்பரங்கள், திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் குறும்படங்கள் மூலம் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் எல்.ஈ.டி. திரை வாகனங்கள் மூலம் டெங்கு விழிப்புணர்வு வீடியோ படக்காட்சியினை ஒளிபரப்பு செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் மூலம் தமிழகம் முழுவதும் பேரணி போன்ற டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள், செவிலியர் கல்லூரி முதல்வர்கள், தமிழ்நாடு மருந்து கடை உரிமையாளர்கள், உணவு வணிகம் செய்பவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அவர்கள் மூலமாக அனைத்து பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள், நீலவேம்பு குடிநீர் வழங்குதல், சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்கு புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டம், 1939 பிரிவுகள் 83, 84 சட்டப்பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 269-ன்படி, சட்டப்படி உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் காய்ச்சல் கண்டவுடன் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி தகுந்த சிகிச்சையை பெற வேண்டும். மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று தாமாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் கண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் குறைந்த பின்பும் நீர்ச்சத்துக் குறைவு மற்றும் இதர பிரச்சினைகளால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் காய்ச்சல் நின்ற பின்பும் மூன்று நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும். போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்த வேண்டும். தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

உரிய மருந்து சீட்டு இல்லாமல் மருந்து கொடுக்கும் மருந்து கடைகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம் மற்றம் நோய்த் தடுப்பு இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை வலுப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் நிலைமையை கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து கூடுதல் தகவல் பெற 104 என்ற எண்ணையும், 044-24350496 / 24334811 என்ற தொலைபேசி எண்களையும் 9444340496 / 9361482899 என்ற கைப்பேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம். கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகளை மக்கள் இயக்கமாக செயல்படுத்திடவும், தொடர்புடைய துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. தமிழக அரசு முழு முனைப்புடன் செயல்படுத்திவரும் பன்முக தொடர் நடவடிக்கைகளில் அனைவரும் பங்கெடுத்து டெங்கு இல்லா தமிழகத்தை உருவாக்குவது அனைத்து மக்களின் சமூகக் கடமையாகும். இப்பணியில் அனைவரும் தமது பங்கினை உணர்ந்து செயல்பட்டால் இந்நோய்த்தடுப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்த இயலும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து