முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியதால் 27 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைப்பு

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக அரசு சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்திய 27 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜி.எஸ்.டி. கூட்டம்

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் டெல்லியில் நடந்தது. கூட்டத்தில் தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பரிந்துரையின் பேரில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்திய 27 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைத்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

அதன்படி உலர்ந்த மாங்காய் துண்டுகள் மீதான 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாகவும், காக்கரா மற்றும் சாதாரண சப்பாத்தி மற்றும் ரொட்டி மீதான 12 சதவீத வரி 5 சதவீதமாகவும், அரசு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் சத்துமாவு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் பதிவு பெற்ற வணிக சின்னமிடப்படாதகார வகைகள் 12-ல் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. பதிவு சின்னமிடப்படாத ஆயுர்வேதா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருந்துகள் 12-ல் இருந்து 5 சதவீதமாகவும் வரைபடத்துக்கான வண்ணங்கள் 28-ல் இருந்து 18 சதவீதமாகவும், குழந்தைகள் பொழுது போக்கிற்கான மாடலிங் பேஸ்ட் 28-ல் இருந்து 18 சதவீதமாகவும், பிளாஸ்டிக் கழிவு, துகள்கள் அல்லது ஓட்டை, உடைசல்கள் 18-ல் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ரப்பர் கழிவு துகள்கள் ...

ரப்பர் கழிவு துகள்கள் அல்லது ஓட்டை உடைசல்கள் 18-ல் இருந்து 5 ஆகவும், கெட்டியான ரப்பர் கழிவு அல்லது ஓட்டை உடைசல்கள் 12-ல் இருந்து 5 ஆகவும்., காகித கழிவு அல்லது ஓட்டை உடைசல்கள் 12-ல் இருந்து 5 ஆகவும் ஏற்றுமதியாளர்களால் விற்கப்படும் டூட்டி கிரடிட் ஸ்கிரிப்ஸ்க்கு 5 சதவீத வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. செயற்கை நூல் இழை கொண்டு செய்யப்பட்டதையல் வேலைக்கு பயன்படுத்தக்கூடிய நூல்கள் சில்லறை விற்பனைக்காக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதன் மீதான வரி 18-ல் இருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

நைலான் பாலியஸ்டர் ...

நைலான் பாலியஸ்டர் அக்ரிலிக் போன்ற அனைத்து சிந்தடிக் நூலிழைகளுக்கு 18-ல் இருந்து 12 சதவீதமாகவும், விஸ்கோஸ், ரேயான் போன்ற அனைத்து செயற்கை நூலிழைகளுக்கு 18-ல் இருந்து 12 ஆகவும் இயற்கை இழை கொண்டு தயாரிக்கப்படும் தையல் வேலைக்கு பயன்படுத்தக் கூடிய நூல்களுக்கு 18-ல் இருந்து 12 சதவீதமாகவும், அசல் ஜரிகைகளுக்கு 12-ல் இருந்து 5 சதவீதமாகவும் வரி குறைக்கப்பட்டுள்ளது.

அலுவலக பொருட்கள்

அத்தியாயம் 68.02-ல் வரும் பொருட்களுக்கு (12 சதவீத வரிக்கு உட்படும் மார்பிள் மற்றும் கிரானைட் நீங்கலாக) 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் உடைந்த மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட அல்லது கழிவு கண்ணாடி உடைசல்கள் 18-ல் இருந்து 5 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. பேப்பர் கிளிப், லெட்டர் கிளிப், இன்டக்சிங் டேக் மற்றும் அதுபோன்ற இழிந்த உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட அலுவலக பொருட்கள், இழிந்த உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட ஸ்டேப்பிள் நீள்வரித்துண்டுகள் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும்,

என்ஜின்கள் பாகங்கள்

வெற்று தண்டு தாங்கி 28-ல் இருந்து 18 ஆகவும், 15 குதிரை திறன் கொண்ட நிலைத்த வேகத்தன்மையுடைய டீசல் என்ஜின்களின் பாகங்கள் 28-ல் இருந்து 18 ஆகவும் தண்ணீர் எடுப்பதற்கு வடிவமைக்கப்பட்டு மின்சாரத்தால் இயங்கக் கூடிய அனைத்து வகையான பம்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாகங்கள் 28 சதவீதத்தில் இருந்து 18 ஆகவும், மின்னணு கழிவு 28 சதவீதத்தில் இருந்து 5 ஆகவும் பயோமாஸ் பாளம் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து