இந்திய நிறுவனத்துக்கு எதிராக போராட்டம்: ராஜபக்சேவின் மகன் கைது

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      உலகம்
Namal Rajapaksa 2017 10 11

மத்தாலா : மத்தாலா விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கும் விடும் இலங்கை அரசின் முடிவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார்.

ராஜபக்சே இலங்கையின் அதிபராக இருந்தபோது அவரது சொந்த மாவட்டமான அம்பாத்தோட்டாவில் கட்டப்பட்டது மத்தாலா விமான நிலையம். ஆனால் மத்தாலா விமான நிலையம் திறக்கபட்ட நாளிலிருந்து அது நஷ்டத்தில் இயங்கி வருவதால் அதனை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு விட இலங்கை அரசு முயற்சி செய்து வந்தது. இதற்கு ராஜபக்சே தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அரசின் இந்த முடிவை எதிர்த்து ராஜ பக்சேவின் மகன் சார்பில் அம்பாதோட்டாவில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ராஜபச்சே கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போரட்டத்தை கலைக்க போலீஸார் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர். இதில் போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது.


இந்த நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக நமல் ராஜபக்சே மற்றும் அவருடன் போரட்டத்தில் பங்கேற்ற ஆறு பேரை இலங்கை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இவர்கள் அனைவரையும் வரும் அக்டோபர் 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து