முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலா சீதாராமனின் நட்பை வரவேற்கும் சீன அரசு

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

நாதுலா : இந்தியாவின் சிக்கிம் மாநிலம், சீனாவின் திபெத் பகுதி சந்திப்பான நாதுலா எல்லைப் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் சென்றார். அப்போது அங்கு முகாமிட்டுள்ள சீன ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார். நிர்மலாவும் சீன அதிகாரிகளும் பரஸ்பரம்  கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவியது. குறிப்பாக சீனாவில் லட்சக்கணக்கானோர் வீடியோவை விரும்பி பார்த்தனர். இதுதொடர்பாக சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழின் நேற்றைய தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: டோக்லாம் விவகாரத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்தது. இந்த இறுக்கத்தை நிர்மலா சீதாராமன் உடைத்துள்ளார். அவரது நட்பை வரவேற்கிறோம். இரு நாடுகளும் நட்புறவை பேண வேண்டும். அமெரிக்கா, ஜப்பானின் தூண்டுதலால் சீனாவுக்கு எதிராக இந்தியா செயல்படுகிறது. அந்த நிலைப்பாட்டை இந்தியா கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து