மஞ்சளாறு - சோத்துப்பாறை அணைகளில் இருந்து 15-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      தமிழகம்
edapadi cm 2017 09 30

சென்னை, தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு - சோத்துப்பாறை அணைகளில் இருந்து வரும் 15-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தேனி மாவட்டம், மஞ்சளாறு நீர்தேக்கத்திலிருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு  முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடும்படி,  தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.  வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று,  தேனி மாவட்டம், மஞ்சளாறு நீர்தேக்கத்திலிருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு  முதல் போக சாகுபடிக்காக வரும் 15-ம் தேதி முதல்  தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தேனி  மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும், தேனி மாவட்டம், சோத்துப்பாறை நீர்தேக்கத்திலிருந்து பழைய நன்செய் நிலங்களுக்கும், புதிய புன்செய் நிலங்களுக்கும் பாசனத்திற்காகவும்  மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறந்து விடும்படி,  தேனி மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.  வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று,  தேனி மாவட்டம், சோத்துப்பாறை நீர்தேக்கத்திலிருந்து  பழைய நன்செய் நிலங்களுக்கும், புதிய புன்செய் நிலங்களுக்கும் பாசனத்திற்காகவும்  மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் வரும் 15-ம் தேதி முதல்  தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். 


இதனால், தேனி மாவட்டத்தில் உள்ள 2,865 ஏக்கர் நிலங்களின்  பாசன  தேவையும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து