பிரபாகரன் உடலைப் பார்த்து நானும் பிரியங்காவும் வருந்தினோம்: ராகுல் காந்தி

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      இந்தியா
rahul-gandhi-prabhakaran 2017 10 11 0

புதுடெல்லி : பிரபாகரன் கொல்லப்பட்டபோது அவரது உடலைப் பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் வருந்தினோம்" என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தி பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். வதோதராவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 2014 தேர்தலில் நாங்கள் அடைந்த படுதோல்வி எங்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. தேர்தல் அடி எனது கண்களை திறந்துவிட்டது. பெண் குழந்தைகளைக் காப்பாற்ற பேட்டு பச்சாவோ என்ற திட்டத்தை பிரதமர் ஆரம்பித்தார். தற்போது பேட்டா பச்சாவோ (ஆண் குழந்தைகளைக் காப்பாற்றுவோம்) என்ற திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். அதனாலேயே அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் மீதான சர்ச்சைகளில் மவுனம் காக்கிறார்.


எனது தந்தை பிரபாகரனால் கொல்லப்பட்டார். ஆனால், பிரபாகரன் கொல்லப்பட்டபோது அவரது உடலைப் பார்த்து நான் வருந்தினேன். எனது சகோதரி பிரியங்காவிடம் இதைத் தெரிவித்தேன். அவரும் பிரபாகரன் கொலை செய்தியைக் கேட்டு வருந்தினார். இதுதான் எங்களது குடும்பத்தின் மதிப்பீடு. ஒரு படுகொலையை எதிர்கொள்ளும் வேதனை என்னவென்பது எங்களுக்குத் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து