முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்தா, ஆயுர்வேதா கவுன்சிலிங் துவங்கியது

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்தியமுறை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 6,938 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தப் படிப்புகளுக்கு 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 396 இடங்களும், 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 859 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.என்.ஒய்.எஸ்., பி.எச்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ். ஆகிய மருத்துவ பட்டபடிப்பில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை, அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் நேற்று துவங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் கலந்தாய்வு நடைபெறுகிறது.

நேற்று முதல் நாள் கலந்தாய்வுக்கு சிறப்புப் பிரிவினர் மற்றும் தரவரிசை 1 முதல் 520 வரை அதாவது கட்-ஆப் மதிப்பெண் 198.50 முதல் 192.50 வரையுள்ள மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமும் கடிதம் மூலமும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்கியது. இதில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து