முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரதட்சணை ஒழிப்பு, பால்ய விவாகத் தடை: பெண் வாக்காளர்களை கவர பிகார் முதல்வர் நிதிஷ் திட்டம்

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

பாட்னா : மதுவிலக்கை தொடர்ந்து வரதட்சணை ஒழிப்பு, பால்ய விவாகத்தடை ஆகிய சமூக சீர்திருத்தங்களை தீவிரமாக அமல்படுத்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் பெண் வாக்காளர்களை கவர அவர் திட்டமிட்டுள்ளார்.

பிகார் முதல்வராக நிதிஷ் குமார் தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்றுள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி பூரண மதுவிலக்கை அவர் அமல்படுத்தியுள்ளார். மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் இத்திட்டம் நாடு முழுவதிலும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இதனால் பாதிக்கப்படும் பெண்கள் நிதிஷ் குமாரை அதிகம் பாராட்டி வருகின்றனர்.
நிதிஷ் குமார் தனது முந்தைய ஆட்சியில், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் சீருடை என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினார். பிகாரில் பெண்களின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், தனக்கு பெண்களின் ஆதரவு இருப்பதாக நிதிஷ் நம்புகிறார். எனினும் இதை மேலும் உறுதி செய்யும் வகையில் சமூக சீர்திருத்தங்களை தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்துள்ளார்.

பிகாரில் வரதட்சணை திருமணமும் பால்ய விவாகமும் ஏற்கெனவே சட்டவிரோத செயல்களாகவே உள்ளன. என்றாலும் இவை தீவிரமாக அமல்படுத்தப்படுவதில்லை. இந்நிலையில் இவற்றை தீவிரமாக அமல்படுத்தவும் தண்டனைகளை அதிகரிக்கவும் சட்டத் திருத்தம் கொண்டுவர நிதிஷ் முடிவு செய்துள்ளார். இதன்படி பிகார் முழுவதிலும் மக்களின் கருத்துகளை மாநில சட்ட அமைச்சகம் கேட்டு வருகிறது. இது முடிந்தவுடன் மக்களவை தேர்தலுக்கு முன்பு புதிய திட்டங்களை நிறைவேற்ற நிதிஷ் முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் நிதிஷ் குமார் பேசும்போது, “திருமணங்களுக்கு இனி என்னை அழைத்தால், அத்திருமணம் வரதட்சணை இல்லாமல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்” என்றார். நிதிஷ் திட்டமிட்டு வரும் சமூக சீர்திருத்தங்களுக்கான முன்னோட்டமாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து