காவலர் குடியிருப்பு, கட்டிடங்கள் மற்றும் மாதிரி வெடிகுண்டு அருங்காட்சியகம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      தமிழகம்
CM Police Residence 2017 10 11

சென்னை, ரூ.77 கோடியே 63 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 381 காவலர்குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 3 இதர காவல்துறை கட்டிடங்கள், 7 ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகக் கட்டிடங்கள், 50 சிறைத்துறை குடியிருப்புகள் மற்றும் மாதிரி வெடிகுண்டு அருங்காட்சியகம் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக்கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டம், மேட்டூரில் 12 கோடியே 71 லட்சத்து 84 ஆயிரம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிரந்தர காவல் பயிற்சிப் பள்ளி, 75 லட்சத்து 95 ஆயிரம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிரந்தர காவல் பயிற்சிப் பள்ளிக்கான நிர்வாகக் கட்டிடம்,3 கோடியே 20 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 200காவலர்களுக்கான பாளையம், என மொத்தம் 16 கோடியே 68 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டடங்களை முதல்வர் எடப்பாடி . பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.


மேலும், சென்னை - புது வண்ணாரப்பேட்டையில் 24 காவலர் குடியிருப்புகள், கோயம்புத்தூர் மாவட்டம் - கோட்டூரில் 19 காவலர் குடியிருப்புகள், இராமநாதபுரம் மாவட்டம் - இராமநாதபுரம் நகரம் மற்றும் தொண்டியில் 77 காவலர்குடியிருப்புகள், தேனியில் 14 காவலர் குடியிருப்புகள், திருவள்ளூர் மாவட்டம் - ஆவடிதமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-ம் அணியில் 154 காவலர் குடியிருப்புகள், திருநெல்வேலிமாவட்டம் – தாழையூத்தில் 34 காவலர் குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடிமாவட்டம் - குலசேகரபட்டிணம் மற்றும் கயத்தாரில் 59 காவலர் குடியிருப்புகள், என 42 கோடியே 77 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 381 காவலர்குடியிருப்புகள், கோயம்புத்தூர் மாவட்டம் - சாய்பாபா காலனி மற்றும் முடீஸ், காஞ்சிபுரம் மாவட்டம் -மகரல் மற்றும் தேனி மாவட்டம் - குமுளி ஆகிய இடங்களில் 3 கோடியே 12 லட்சத்து55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையங்கள்அரியலூரில் 1 கோடியே 93 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிரடிப்படைக்கான பாளையம், மதுரையில் 4 கோடியே 72 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆயுதப்படைக்கான நிர்வாகக் கட்டிடம், திருப்பூர் மாவட்டம் -நல்லூரில் 57 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் சமையலறையுடன் கூடிய நாய் பட்டறை,

சென்னை - ஆலந்தூரில் 5 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சென்னை நகர பிரிவுக்கான 7 அலுவலகக் கட்டிடங்கள்; கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 2 கோடியே 39 லட்சத்து 99 ஆயிரம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 சிறைத்துறை குடியிருப்புகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் - புழல் மத்திய சிறை வளாகத்தில் 3 கோடியே 71 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30 சிறைத்துறை குடியிருப்புகள்; சென்னை – மருதம் அதிரடிப்படை வளாகத்தில் 27 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வெடிகுண்டு அருங்காட்சியகம் என மொத்தம், 81 கோடியே 87 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான காவல்துறை மற்றும் சிறைத்துறை கட்டிடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், புதிதாக துவங்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி.  டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து