முதல்வர் எடப்பாடியுடன் திருமாவளவன் சந்திப்பு

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      தமிழகம்
CM Thirumavalavan 2017 10 11

சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது கேரளத்தை பின்பற்றி தமிழகத்தில் கோவில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்க முன்வரவேண்டும் என்று அவர் முதல்வரிடம் வலியுறுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள்கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று மாலை சந்தித்து பேசினார் சுமார் 40 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது. இதன் பின்னர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது., கேரளாவில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 206 பேர் பயிற்சி அர்ச்சகர்களாக தயாராக இருக்கிறார்கள். இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. கேரளாவை போல், தமிழகத்திலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் தொடர்பாக போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், டெங்கு தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

சிகிச்சை அளிக்கும் இருக்கும் தடைகளை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதுகுறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். டெங்கு நோயால் இறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். கொங்கு மண்டல விவசாயிகளின் கோரிக்கை, கெயில் எரிவாயு திட்டத்தை, சாலையோரமாக போடக்கோரியும் கேட்டுள்ளோம். அது
தொடர்பாக, அமைச்சர்களிடம் கலந்தாய்வு நடத்தியிருப்பதாக, முதல்வர் தெரிவித்துள்ளார்.

அரசுக்கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே தலித் மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தலித் மாணவர்களுக்கான மானியம் குறைப்பு குறித்தும் பேசினோம். தனியார் பொறியியல் கல்லூரிகளின் கட்டணத்திற்கு ஏற்ப உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். அம்பேத்கர் மணி மண்டபம் சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளதாக அவர் கூறினார். மேலும், அவர் கூறும்போது, உச்ச நீதி மன்றம், நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக்கடைகளை மூட சொல்லியுள்ளது. ஆனால், மீண்டும் அந்த கடைகள் திறப்பது கண்டிக்கதக்கது. மது விலை உயர்வு குறித்து நாங்கள் கருத்து சொல்ல விரும்ப வில்லை, அனைத்து, டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும், அது தான் எங்களின் நிலைப்பாடு என தெரிவித்தார்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து