முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாடானை மருங்கூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கலெக்டர் நடராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடானை தாலுகா மருங்கூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

     ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மருங்கூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் முனைவர் நடராஜன் அரசின் பல்வேறு துறைகளின் சார்பாக 83 பயனாளிகளுக்கு ரூ.25லட்சத்து 26ஆயிரத்து 459 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கினார்.  அப்போது அவர் பேசியதாவது:- பொதுமக்களிடமிருந்து  பல்வேறு கோரிக்கைகள் வேண்டி மொத்தம் 71 முன் மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்;வு காணப்பட்டுள்ளது. இதுதவிர இன்றைய முகாமில் தகுதியான மனுதாரர்களை தேர்வு செய்து மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 26 ஆயிரத்து  459  மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பாக மருங்கூர், மானவநகரி, தீர்;த்தாண்டதானம், எட்டிசேரி ஆகிய கிராமங்களில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.90 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3.6 லட்சம் மதிப்பில் உறைகிணறு அமைத்திடும் பணிகளுக்காகவும், கிழக்கு கடற்கரை சாலையில் எட்டிசேரி விளக்கில் ரூ.4 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளுக்காகவும், ரூ.3.50 லட்சம் மதிப்பில் மானவநகரி மண்சாலையினை தார் சாலையாக மாற்றிடும் பணிகளுக்கு என மொத்தம் 7 பணிகளுக்கு ரூ.12லட்சத்து 60ஆயிரம்  மதிப்பில் நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. 
மேலும் தீர்த்தாண்டதானம் அருள்மிகு சகலதீர்த்தமுடையார் ஆலயத்தின் தென்புறம் உள்ள பாதகன் ஊரணி முதல் சுனாமி சாலை வரை தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு  ரூ.35 லட்சமும் மற்றும் தீர்த்தாண்டதானம் அருள்மிகு சகலதீர்த்தமுடையார் கோயில் வெளி பிரகாரத்தை சுற்றி பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு ரூ.15  லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு இராமாயணம் தொடர்புடைய புனித ஸ்தலங்களை இணைக்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதுதவிர தற்போது கோடை காலம் முடிவடைந்து வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கவுள்ளதால், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.  பொதுமக்கள் குடிநீரினை சுத்தமாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.  சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பதோடு பயன்பாட்டில் இல்லாத குடிநீர் தொட்டிகளை மூடி வைத்திட வேண்டும்.  ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களால் கழிவு செய்யப்படும் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டி பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்தாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொட்டி இறுதியாக்கம் செய்வதற்கு ஏதுவாக கூடுதல் எண்ணிக்கையில் சிமெண்ட் உறைகள் மூலமான குப்பைத் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேற்கொண்டு பொதுமக்கள் தங்களால் உருவாக்கப்படும் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடாமல் ஆங்காங்கே கொட்டுவது தெரியவந்தால் பொது சுகாதார விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
 இப்பணியை பொருத்தமட்டில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசுவை உற்பத்தி செய்யக்கூடிய கொசு புழுக்கள் வளர்ந்துள்ள இடங்கள் கண்டறிந்து அதனை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதுகுறித்து வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று இதற்கான சான்றினை அந்தந்த துறைத் தலைவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கடல்நீர் நிலப்பரப்பிற்குள் உட்புகாமல் தடுப்பதற்காக அதற்கு தகுதியான 10 இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் ரூ.3.36 கோடி மதிப்பில் தரைமட்ட தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். இம்முகாமில்  கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன்,  சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்;ட சமூக நல அலுவலர் குணசேகரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, திருவாடானை வட்டாட்சியர் சாந்தி உள்பட  பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து