நீடாமங்கலம் அருகில் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவிகள் பாய் நாற்றங்கால் செயல் விளக்கம்.

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      தஞ்சாவூர்
needa

தஞ்சாவூர் வேளாண்மைக் கல்லு£ரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்தில் விவசாயிகளின் வேளாண்மை அனுபவங்களை நேரடியாக பெறுவதற்காக நீடாமங்கலம் அருகில் உள்ள நகர் கிராமத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

வேளாண் பணி

அக்கிராமத்தில் விவசாயிகளில் நிலத்தில் பாய் நாற்றங்கால் அமைக்கும் முறை பற்றி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்க வயல்வெளி பயிற்சி அளித்தனர். ஒரு ஏக்கரில் நடுவதற்கு 100 சதுர மீட்டர் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும்.சமமான நிலத்தில் உயர்த்தப்பட்ட படுக்கையில் பிளாஸ்டிக் விரிப்பை விரிக்க வேண்டும். அதன் மீது மரச்சட்டத்தை வைத்து உயிர் உரங்கள் மற்றும் தொழு உரம் கொண்ட மண்கலவையை மரச்சட்டத்தின் மேல்பாகம் வரை மூட வேண்டும். 24 மணிநேரம் விதைகளை ஊறவைத்து உலத்த்தப்பட்ட படுக்கையில் வைப்பதால் வேர்கள் வளர்ந்து மண்ணில் ஆழத்திற்குச் செல்லாமல் தடுக்கப் படுகிறது.இதனால் இம்முறை இயந்திர நடவுக்கு ஏற்றதாக உள்ளது.

பாரம்பரிய நாற்றங்கால் முறையில் ஏக்கருக்கு 30 கிலோ விதையளவு பயன்படுத்தப்படுகிறது.ஆனால் பாய் நாற்றங்கால் விதையளவு ஏக்கருக்கு 8&10 கிலோவாக குறைந்துள்ளது. இதனால் நாற்றுகளின் வேர் சேதம் குறைக்கப்படுகிறது.14 லிருந்து 16 நாட்களில் நாற்றுகளை வயலில் நடுவதன் மூலம் முளைப்பு திறன் மற்றும் து£ர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.நெற்பயிரில் களையெடுக்கும் கருவியை (கோனாவீடர்)பயன்படுத்த முடியும். கலைகளின் பாதிப்பு குறைவது மட்டுமின்றி மண்ணில் உரத்தைச் சேர்க்கிறது. மண் நன்கு கிளரப்படுவதால் வேர்களுக்கு கிடைக்கப்படும் காற்றின் அளவு அதிகரிக்கிறது. இதனால் மகசூல் அரிகரிக்கிறது என்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து