முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மின்னல் வேகத்தில் நடவடிக்கைகள் : ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தீவிரம்

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 மதுரை,-         டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தீவிரபடுத்தபட்டுள்ளது என்று வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.தெரிவித்தார்.
         மதுரை வடக்கு சட்டமன்றதொகுதிக்குட்பட்ட ரிசர்வ்லைன் காலாங்கரை பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேவர்பிளாக் சாலையை நேற்று மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா திறந்துவைத்து பார்வையிட்டார். பேவர் பிளாக் சாலை போடப்பட்டு பொதுமக்களின் பயன்பாடு பற்றி அவர் கேட்டறிந்தார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வுசெய்து கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியையும் அவர் பார்வையிட்டார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை இலவசமாக அவர் வழங்கினார்.
         பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறியதாவது:-
              மதுரை மாநகரில் டெங்குகாய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து முழுவீச்சில் பணியாற்றி வருகிறது. மக்கள் தொகை அதிகஅளவில் உள்ள மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பலஇடங்களில் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். எனவே இந்த தொகுதியில் டெங்குகாய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு மதுரை மாநகராட்சி சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாநகராட்சி பணியாளர்கள் பல இடங்களில் கொசுஒழிப்பு மருந்தை தெளித்து வருகிறார்கள்.
      மேலும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மண்டல தலைவர்களும் எங்களுடன் இணைந்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். அவர்கள் வீடு,வீடாக சென்று டெங்கு காய்ச்சலை தடுக்கும் பணியில் மக்களிடம் எடுத்துக்கூறி மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்கள். மதுரை மாவட்டத்தை பொறுத்த அளவில் டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை. யாரும் பலியாக கூடாது என்பது தான் எங்களது நடவடிக்கையின் நோக்கம். இந்த டெங்கு ஒழிப்பு பணியில் ஆளுங்கட்சியினரை தவிர எதிர்கட்சியினரும் ஈடுபடலாம். அவரவர் செய்யவேண்டிய பணிகளை ஆங்காங்கு செய்தால் டெங்கு பாதிப்பில் இருந்து பொதுமக்களை காப்பாற்றலாம்.
         சர்வேயர்காலணி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வரை செல்லும் 120 அடி சாலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதே போல் கோகலே சாலையில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள்  விரைந்து முடிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
              அவருடன் முன்னாள் வடக்கு மண்டல தலைவர் கே.ஜெயவேல், பகுதி கழக செயலாளர் அண்ணாநகர் எம்.என்.முருகன், வட்ட செயலாளர் கார்த்திக் முனியசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் சென்றனர்.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து