முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் விமானப்படை கமாண்டோக்கள் 2 பேர் பலி - தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த 2 கமாண்டோக்கள் பலியாகினர். 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலியா தெரிவிக்கையில், ''இந்திய விமானப் படையின் முக்கியப் பிரிவான கருட் கமாண்டோ பிரிவைச் சேர்ந்த 2 கமாண்டோக்கள் இந்தத் தாக்குதலில் பலியாகியுள்ளனர் என்றார். மேலும் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தேடுதல் வேட்டை

இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலையில் பந்திபோரா மாவட்டத்தில் நடைபெற்றது. பந்திபோரா மாவட்டத்தின் ஹஜின் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். உடனே நடந்த தீவிரமான தாக்குதலில் இரு தரப்பினருக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இருவர் சுட்டுக்கொலை

அப்போது தீவிரவாதிகள் இருவரும் உடனடியாகக் கொல்லப்பட்டனர்.  சுட்டுக்கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச்சேர்ந்தவர்கள்  கருட் பிரிவைச் சேர்ந்த 3 கமாண்டோக்கள் காயமடைந்தனர். அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கருட் கமாண்டோக்கள் இந்திய விமானப் படையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இப்பிரிவில் 1000 கமாண்டோக்கள் மட்டுமே உளனர். பறவை வகையான கருட இனத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய விமானப் படையின் ஒரு பிரிவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து