ஹபீஸ் சயீத்தின் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய பாக். தேர்தல் ஆணையம் மறுப்பு

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      உலகம்
jamath 2017 10 12

இஸ்லமபாத்: ஹபீஸ் சயீத்த்தின் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ள ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் மில்லி முஸ்லிம் லீக் (எம்எம்எல்) என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். தனது பயங்கரவாத இயக்கமான ஜமாத் உத் தவா இயக்கத்தின் கிளையான்  மில்லி முஸ்லீம் லீக் (எம்எம்எல்) என்ற அமைப்பை அரசியல் கட்சியாக்கி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

ஹபீஸ் சயீத்தின் அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு வைத்திருப்பதால், மில்லி முஸ்லிம் லீக் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யக்கூடாது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திற்கு கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தது. இதன் அடிப்படையில், சயீத்தின் அரசியல் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

ஹபீஸ் சயீத் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வீட்டுக்காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், வீட்டுக் காவலை நீட்டித்தது தொடர்பான போதுமான ஆதாரங்களை அரசு வழங்காவிட்டால் விடுதலை செய்யப்போவதாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து