முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனிச்சரிவில் சிக்கி பெண் தோழி உயிரிழப்பு: மனமுடைந்த பிரபல மலையேறும் வீரர் தற்கொலை

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க் : மலையேறும் போது பனிச்சரிவில் சிக்கி பெண் தோழி உயிரிழந்தால் உலக புகழ்பெற்ற மலையேறும் வீரர் ஹெய்டன் கென்னடி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

உலக புகழ்பெற்ற மலையேறும் வீரர் ஹெய்டன் கென்னடி (வயது 27) இவரது பெண் தோழி பெர்கின்ஸ் (வயது 23) இவரும் மலையேறும் வீராங்கனை ஆவார். இந்நிலையில் இருவரும் அமெரிக்காவில்  மாண்டானா என்ற பகுதியில் உள்ள செங்குத்தான பனி மலையில் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் ஹெய்டன் கென்னடி அதிர்ஷ்டவசமாக வெளியேறி உயிர்தப்பினார். ஆனால் அவரது தோழி பெர்கின்ஸ்  சுமார் 150 அடி பள்ளத்திற்கு கீழ் புதையுண்டு பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். காதலி இறந்த துக்கம் தாளாமல் ஹெய்டன் கென்னடி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து