நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 'தெரிக் இ இன்சாப்' கட்சி தலைவர் இம்ரான் கானுக்கு பிடிவாரண்ட்

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      உலகம்
Imran Khan 2017 10 12

இஸ்லாமாபாத் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால் தெரிக் இ இன்சாப் கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெரிக் இ இன்சாப் என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்திவருகிறார். இந்நிலையில், பழைய தேர்தல் வழக்கு ஒன்றில் ஆஜராகாமல் அவர் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது. இந்த வழக்கு அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையர் முன்னிலையில் நேற்று விசாரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் 28-ம் தேதி அவரை ஆஜர் படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான் ஆலோசகர், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக தீர்ப்புகள் வழங்க முடியாது என கூறியுள்ளார்.


இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து