முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவது வழக்கம். தமிழ்நாட்டில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்கவில்லை. தென்மேற்கு பருவமழை தான் பெய்து வருகிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:–-

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தான் தொடங்கியது. வெப்பச்சலனம் காரணமாக அதிகபட்சமாக ஒகேனக்கல்லில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இன்றும், நாளையும் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–-

ஏற்காடு 8 செ.மீ., ஆம்பூர் 6 செ.மீ., தாமரைபாக்கம், பரமக்குடி, மருங்காபுரி, திண்டுக்கல், பேரையூர் 5 செ.மீ., திருப்பத்தூர், லால்குடி, பாரூர், கோத்தகிரி, தாதையங்கார்பேட்டை, அவினாசி, வாழப்பாடி, பொன்னேரி, பூதபாண்டி, தேன்கனிக்கோட்டை, புள்ளம்பாடி 4 செ.மீ, வால்பாறை, கடலாடி, செங்கம், நிலக்கோட்டை, பேச்சிப்பாறை, சின்னகல்லாறு, பெரியகுளம், உசிலம்பட்டி, தாராபுரம், ஆத்தூர், கமுதி, கடவூர் 3 செ.மீ.,மழை பெய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து