முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்டம் பாலாறு பொருந்தலாறு அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு திண்டுக்கல் மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று,  பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் முதல் போக பாசனத்திற்காக  20.10.2017 முதல்  தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து