காஷ்மீர், பூஞ்ச் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் உள்பட இருவர் பலி

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      இந்தியா
pak military 2017 10 12

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்கியதில் பாதுகாப்பு படை வீரர் உள்பட இருவர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் அருகே க்ரிஷ்னா காதி செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நேற்று பிற்பகலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகள் மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகள் மூலம் அவர்கள் தாக்கினர். இந்த தாக்குதலில் இந்திய வீரர் மற்றும் அங்குள்ள உள்ளூர்வாசி பலியாயினர். பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த ஆண்டில் இதுவரை 600 முறை பாகிஸ்தான் ராணுவல் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து