'யோ-யோ’வில் அஸ்வின் பாஸ்!

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      விளையாட்டு
aswin

இந்திய கிரிக்கெட் அணியில் பீதியை கிளப்பி வருகிறது யோ- யோ என்ற உடல் தகுதி டெஸ்ட். இதில் பாஸ் பண்ணினால் மட்டுமே அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற நிலை. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலியே, இந்த டெஸ்ட்டில் ஜஸ்டில்தான் பாஸ் செய்திருக்கிறாராம். சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் இந்த டெஸ்டில் தோல்வியடைந்ததால், அணியில் இடம்பெறமுடியாமல் உள்ளனர். அதே நேரம் 38 வயதான ஆசிஷ் நெஹ்ரா, இதில் பாஸாகி, இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான, டி20 போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சோதனையில், தான் வென்றுள்ளதாக சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய அஸ்வின், ஒரு நாள் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் சேர்க்கப்படவில்லை. அவருக்கும் ஜடேஜாவுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ரஞ்சி போட்டியில் விளையாடி வரும் அஸ்வின், கடந்த செவ்வாய்க்கிழமை, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார். அங்கு நடந்த யோ- யோ உடல் தகுதி தேர்வில் கலந்துகொண்டு வென்றுள்ளார். இத்தகவலை அவரே தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தியா- நியூசிலாந்து இடையேயான ஒரு நாள் போட்டிகளில் அவர் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து