முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதர்களின் குணநலன்களை ஆளுமை செய்யும் நவக்கிரக அம்சங்கள்

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

ஒரு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ அதன் ஐந்து வயது வரை குருவின் காரகத்தால் ஆளுமை செய்யப்படும். புதன் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள பருவம் புதனின் காரகத்தால் ஆளுமை செய்யப்படும். செவ்வாய் 15 வயது முதல் 22 வயது வரை உள்ள நிலை ஆண் மற்றும் பெண் பருவமடையும் வயது. இந்த நிலையில் காம குணங்கள் நிறைந்து காணப்படும்.

இவர்கள் செவ்வாயின் காரகத்தால் ஆளுமை  செய்யப்படுவார்கள். செவ்வாயை போககாரகர் எனவும் அழைப்பர். சுக்கிரன் திருமணம் ஆகாத பெண்கள் அனை வருக்கும் சுக்கிரன் காரகமாக அமைவார். சுக்கிரனை காமகாரகன் அல்லது களத்திர காரகன் என்று அழைப்பர். சூரியன் ஒர் ஆண் குழந்தை பெற்றவுடன் அவர் சூரியனின் காரகமான தந்தை காரகம் வகிக்க ஆரம்பிப்பார்.

சந்திரன் ஒரு பெண் குழந்தை பெற்றவுடன் சந்திரனின் காரகம் வகிக்க ஆரம்பிப்பார். இராகு ஆண் தான் பெற்ற குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பெற்றவுடன் பாட்டன் காரகமான இராகுவின் காரகத்தை வகிக்க ஆரம்பிப்பார். கேது பெண் தான் பெற்ற குழந்தை திருமணம் ஆகி குழந்தை பெற்றவுடன் பாட்டி காரகமான கேதுவின் காரகத்தை வகிக்க ஆரம்பிப்பார். சனி பாட்டன் காரகமும், பாட்டி காரகமும் உடைய மனிதர்கள் வயதான காலத்தில் சனியின் காரகமான ஆயுள் காரகமாக மாற்றம் அடைகின்றனர்.

கிரக காரகத்துவம்

சூரியன் :  தன்னம்பிக்கை, நிர்வாகத்திறமை, புகழ், தாராள குணம், இறக்கம், கருணை, பிடிவாதம், முன்கோபம், தைரியம், அஞ்சாநெஞ்சம், வைராக்கியம், உடல் உஷ்ணம், நெருப்பு, கண்கள், சிவா வழிபாடு, இவரது நிறம் சிவப்பு ஆகும்.

இவர் சத்திரிய ஜாதியைச் சேர்ந்தவர். இவரது கல் மாணிக்கம் ஆகும். செந்தாமரை, எருக்கன், காரம், அக்னி, சிவன், தாமிரம் ஆடுதுறை ஒரு மாதம் சஞ்சாரம். புpற பெயர்கள் ஆதவன், ரவி, கதிரவன், சுடரோன், திவாகரன், தினகரன், தினமணி, பகலோன், வெண்சுடர், வெய்யோன். தந்தை, வலது கண், அரசன், அரசாங்கம், பிரதமர், வீட்டின் வலது ஜன்னல்.

சந்திரன் : புகழ், கற்பனை, சலனபுத்தி, அமைதி, கொள்கை பிடிப்பு, கலை உணர்வு, சாந்தம், பொறுமை, சகிப்பு தன்மை, சோம்பல், காதல், குட்டை, வெண்மை, வைசிய ஜாதி, முத்து, நெல்தானியம், புஷ்ப மலர், முருங்கை குச்சி, ஈயம், பார்வதி தேவி, இரண்டேகால் நாள்.

வேறு பெயர்கள் - அம்புலி, இந்து, கலாநிதி, குழவி, சோம, மதி, தண்சுடர், திங்கள், தாய், மாமியார், மனம், உணவுப்பொருள், இடதுகண், கலை, கற்பனை, உப்பு, சங்கு, குளியல்அறை, இடதுபக்க ஜன்னல், திருட்டு தனம், கள்ளத்தனம்,

செவ்வாய் : முன் கோபம், ஆத்திரம், அவசரம், வீரம், கர்வம், ஆணவம், அகம்பாவம், முரட்டுத்தனம், வேகம், சுறுசுறுப்பு, படபடப்பு, வீண்சண்டை, வாக்குவாதம், உணர்ச்சி வயப்படுதல், ஆதிக்க உணர்வு, பூமிகாரகன், குருதிகாரகன், ஆத்மகாரகன், விபத்துகாரகன், பூமிகாரகன்,

உடன்பிறப்பு, ஆண்கிரகம், குட்டை, சிவப்பு, சத்ரிய ஜாதி, குரூர குணம், பித்தம், தெற்கு திசை, பவளம், துவரை தானியம், செந்தாமரை, அன்னபறவை, செம்பு உலோகம், சுப்பிரமணியர், வைதீஸ்வரன் கோவில், ஒரு மாதம் சஞ்சாரம்,

சகோதரன், கணவன், காவல்துறை, வெட்டுக்காயம், தழும்பு, படுக்கை அறை, சுரங்கம், துப்பாக்கி, கத்திரி, கோடாலி,
புதன் : பேச்சாற்றல், எழுத்தாற்றல், நகைசுவை, பொறுமை, வசீகர தன்மை, அறிவு, தந்திரம் கலகலப்பு, கோழைத்தனம், விதைகள், ஜோதிட தன்மை, சிற்பம், இராஜ தந்திரம், வேதம், மந்திர திறமை, கல்விகாரகன்,

தாய்மாமன், ஜோதிட பாஷை, வைசிய ஜாதி, வாதம், பட்சிகள், பச்சைபயிறு, வெண்காந்தள் மலர், நாயுறுவி குச்சி, பித்தளை, உவர்ப்பு, பச்சைபட்டு, மதுரை, ஒரு மாதம், அருணன், கணக்கன், சௌமியன், பண்டிதன், மாலவன் புக்கு,

கணக்கன், சட்டம், கழுத்து, தொண்டை, நாக்கு, தோட்டம், செய்திகள், தோள்பட்டை, மாமன், வியாபாரம், வித்தைகள், கல்வி அறிவு.

குரு : சாந்தம், பொறுமை, தெய்வநம்பிக்கை, மதிப்பு, ஒழுக்கம், கடமை, கண்ணியம், நேர்மை, மனிதநேயம், பக்தி, பண்பாடு, மதகுருமார், ஆசிரியர்,

தனகாரகன், புத்திரகாரகன், ஆண்கிரகம், நெட்டையானவர், சமஸ்கிரதம், சாமியார், பிராமணஜாதி, புஷ்பராகம், கொண்டைகடலை, முல்லைமலர், அரசங் குச்சி, யானை, தங்கம், பிரம்மா, மஞ்சள், ஆலங்குடி, இருவருடம்.

வியாழன், அந்தணன், அரசன், ஆசான், சிகண்டி, அரசகுரு, தேவகுரு, பிருகஸ்பதி, மறையோன், பக்தி, ஞானம், நீதிபதி, பிராமணன், பூஜை அறை, பசு, அமைச்சர், மூக்கு, நிர்வாகம், காசு புழங்கும் இடம்.

சுக்கிரன் : கலை, ஆடல், பாடல், நடிப்பு, அலங்காரம், ஆடம்பரம், காமகளியாட்டம், கலாரசிகர், மேன்மை, பயந்த சுபாவம், அமைதியான தோற்றம், கவர்ச்சிகரமான பொருள், காதல், இன்பம்,

களத்திரகாரகன், வாகனகாரகன், பெண்கிரகம், சமஉயரம், தெலுங்கு, வெண்மை, கிழக்கு, வைரம், மொச்சை, வெண்தாமரை, அத்திகுட்சி, கருடன், இனிப்பு, வெள்ளி உலோகம், மகாலட்சுமி, வெண்பட்டு, ஸ்ரீரங்கம், சாமியார், ஒரு மாதம்,

வெள்ளி, மால், சுங்கன், அசுரகுரு, சல்லியன், மலைகோள், மாணவி சகோதரி, காம, காதல், திருமணம், விந்து, வாசனை திரவியம், வங்கி, நகைத்தொழில், போதை பொருள், கேளிக்கை விடுதி, அழகு கவர்ச்சி,

சனி : சோம்பல், பிடிவாதம், மந்தகுணம், நடுநிலைமையான பேச்சு, துஷ்ட தனம், கீழ்த்தரமான பேச்சு, விகார கோபம், கல்நெஞ்சம்,

ஜீவனகாரகன், ஆயுள்காரகன், அலிகிரகம், அந்நிய பாஷை, கருப்புநிறம், சூத்திர ஜாதி, குரூர குணம், மேற்குத்திசை, எள்தானியம், கருங்குவளை மலர், காகம் வாகனம், இரும்பு உலோகம், கருப்பு பட்டு, எமன் தேவதை, திருநள்ளாறு, இரண்டரை ஆண்டு.

அந்தகன், கரியவன், காரி, நீலன், மந்தன், முடவன், முதுமகன், மூத்த சகோதரன், தாடை, மூட்டு, முழங்கால், சேமிப்பு அரை, கம்பளி ஆடை,

இராகு : சோம்பல், அலட்சியம், வஞ்சகம், சூது, பொய், பெரும் திருட்டு, ஏமாற்றுதல், நடிப்பு, ஆடம்பரம், போதை.

தந்தை வழி பாட்டன், ஞானகாரகன், பெண் கிரகம், நெட்டை, கருப்பு நிறம், அந்நிய பாஷை, சங்கிராம ஜாதி, பித்த நோய், தென்மேற்கு, கோமேதகம், உளுந்து, மந்தாரை புஸ்பம், ஆடு வாகனம், புளிப்பு சுவை, பத்ரகாளி, கருப்பு வஸ்திரம், திருநாகேஸ்வரம், அரக்கர் தலை பாம்பு உடல் கொண்டவர்.

கரும்பாம்பு, நஞ்சு, மதிபகை, வாய், உதடு, முஸ்லீம், பாம்பின் வால், மோடிவித்தை, இரசாயனம், பிளாஸ்டிக், மலக்குடல், இரப்பர், காபிகொட்டை, இலஞ்சம், விபத்து, மரணம், விதவைதனம், கடத்தல், சட்டத்திற்கு புறம்பான தொழில்.

கேது : ஞானம், தியானம், தவம், மௌனம், வைராக்கியம், நிதானம், மனவெறுப்பு, விரக்தி, சந்நியாசம், ஆன்மீக உணர்வு, பிடிப்பு இல்லாமை, வேதாந்தம்.

தாய்வழி பாட்டன், மோட்சகாரகன், ஆண்அலி, நெட்டை, அன்னியபாசை, சிவப்பு நிறம், சங்கிராம ஜாதி, பித்தநோய், வடமேற்கு திசை வைடூரியம் கொள்ளு தானியம் செவ்வரளி, தர்பை, சிங்கம், துருக்கள், இந்திரன், பலவண்ண நிறம், காளகஸ்தி, பாம்பின் தலை, அரக்கர் உடல்.

செம்பாம்பு, கதிர்பகை, சித்தி, ஞானி. தாய்வழி பாட்டன், நரம்பு, முடி, மர்ம உறுப்பு, மாந்திரீகம், கோயில், மின்கம்பி, தியான அறை, மருத்துவ அறை, மூலிகை, சந்நியாசம், புகை மயக்கம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து