முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை, -       தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
         இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
      தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் எந்த திருட்டு மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாநகரத்தின் முக்கிய இடங்களில் 20 சி.சி.டி.வி. கேமராக்கள் மேலும் வீடியோ கேமராக்கள் பொருத்திய வாகனங்கள் குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டு திருடர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
    மேலும் உயர்கோபுரங்கள் அமைத்து அதன் மீது போலீசார் பைனாகுலர் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நான்கு மாசிவீதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணியில் சீருடை அணியாத போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரை பொறுத்தவரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
        நடைபாதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் வியாபாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சேதுபதி பள்ளி, செயிண்ட் மேரீஸ் பள்ளி, மதுரை கல்லூரி, தமுக்கம் மைதானம், மீனாட்சி கல்லூரி உள்ளிட்ட 7 இடங்களில் இலவச வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை முன்னிட்டு நேதாஜிரோடு, டவுன்ஹாஸ்ரோட்டில் வாகனங்கள் செல்லதடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து