திருவாரூர் புதிய இரயில் நிலையத்திலிருந்து சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்புத் தின விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      திருவாரூர்
Thiruvarur 2017 10 13

 

திருவாரூர் புதிய இரயில் நிலையத்திலிருந்து சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்புத் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தொடங்கி வைத்தார்.

 விழிப்புணர்வு பேரணி

  மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, வருவாய்துறை, ஆகிய துறைகள் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்செரிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடைபெற்றது. திருவாரூர் புதிய இரயில் நிலையத்திலிருந்து சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்புத்தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார் -

 மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, வருவாய்துறை, ஆகிய துறைகள் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்செரிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்புப்பணிகளில் ஈடுபடுவது, பேரிடர் ஏற்படும் போது பொதுமக்களின் உயிர்களையும், மற்றும் உடமைகளையும் எவ்வாறு மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.ஒத்திகை முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்தி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கட்டிட இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்டு எடுத்து தேவையான முதலுதவி அளித்தல், தீ விபத்து ஏற்படும் போது அதிலிருந்து அவர்களை மீட்டு முதலுதவி அளித்தல், பேரிடர் காலங்களில் நெடுஞ்சாலையில் மரங்கள் விழுந்தால் அதனை அகற்றி போக்குவரத்து சீர் செய்தல், ஆயில் விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு மீட்பது, மற்றும் கம்பிகளால் இடர்பாடு ஏற்பட்டால் அதனை எவ்வாறு அகற்றுவது குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை நடத்தி காண்பித்தனர்.

முன்னதாக சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு 250 கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் இரயில் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ், கொடியசைத்து தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, மாவட்ட அலுவலர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை (பொ) குமார், திருவாரூர் வட்டாட்சியர் ராஜன்பாபு ,தனி வட்டாச்சியர் (பேரிடர் மேலாண்மை)) உதயகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து