முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளி விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தமிழகத்தில் மாணவர்களுக்கு விபத்துகாப்பீட்டுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் திருச்செந்தூரில் தெரிவித்தார்.

பள்ளி விழா

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளியில் அட்டல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் திறப்புவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளிதாளாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் செல்வவைஷ்ணவி விருந்தினரை கௌரவித்தார். போக்குவரத்து மேலாளர் கிஷோர்பாபு வரவேற்புரையாற்றினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வுக்கூடத்தை பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார். பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தனர். தொடர்ந்து நடந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதாவது: தமிழகத்தில் முதல் முறையாக அடல் டிங்கரிங் ஆய்வுக்கூடம் இப்பள்ளியில் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கியுள்ளது. கல்வித்துறை முன்னேற்றம் தான தமிழகத்தின் முன்னேற்றம் என்ற முனைப்பில் கல்வி அமைச்சர் செயல்பட்டு வருகிறார். கல்வித்துறையில் இந்திய கண்டம திரும்பி பார்க்கும் வகையில் அவர் செயல்பாடு உள்ளது. ப்ளஸ் 2 படிக்கும் போதே வேலை வாய்ப்பிற்கான பயிற்சிகள் அளிக்கபடும். கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்பட உள்ளது என பேசினார்.

அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: ஆயிரம் அன்னசத்திரத்தை காட்டிலும் ஒரு கல்விக்கூடம் திறப்பது பெரியது என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். காஞ்சி பெரியவர் பல லட்சம் மைல் தூரம் நடந்து ஆன்மிகத்தை வளர்த்தார். அவரது பெயரில் அமைந்துள்ள இந்த பள்ளி அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக செயல்படுகிறது மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்பள்ளி இந்திய அளவில் 112வது இடத்தையும் தமிழகத்தில் 6வது இடத்தையும் மாவட்டத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கு பரிசாக மத்திய அரசு வழங்கிய நிதியுடன் இணைந்து மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக அட்டல் அறிவியல் ஆய்வத்தை உறுவாக்கியுள்ளனர். இந்த ஆய்வகத்தால் இப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்பெறுவர். இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அப்துல்கலாம் கூறினார். அவரது கனவை இப்பள்ளி மாணவர்கள் நிறைவேற்றும் விதமாக விஞ்ஞானத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இதற்கு உறுதுணையாக செயல்படும் பள்ளியின் முயற்சி பாராட்டதக்கதாகும்.  தமிழகத்தில் கல்வித்துறை உலகளவில் பேசப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதற்காக 14 திட்டங்களை அறிவித்தார். இதில் முக்கியமானது பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தால் இந்திய அளவில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது. இத்திட்டத்திற்கு ரூபாய் 26 ஆயிரத்து 932 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். மாணவர்கள் அரசு தேர்வில் ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் முதலாவது இரண்டாவது இடங்களை பிடிப்பதால் மற்ற மாணவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. எனவேதான் கடந்த தேர்வில் ரேங்க் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது மாணவர்கள் ஒருசில நிமிடங்களில் தேர்வு ரிசல்ட் பார்த்திட எஸ்எம்எஸ் மூலம் செல்போனில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு கல்வித்துறை சாதனைப்படைத்துள்ளது. 3 லட்சம் மாணவர்கள் 246 பாடங்களை படிக்கிறார்கள். இதில் ஐஏஎஸ், டாக்டர், இஞ்சினியர், அக்ரி என குறிப்பிட்ட 10 பாடங்களைத்தான் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்து படிக்கின்றனர். இதனால் வேலையில்லா திண்டாண்டம் உறுவாகிறது

கணினி பயிற்சி

மாணவர்களை 246 பாடங்களையும் படிக்கவைத்து அனைவருக்கும் வேலை வாய்ப்பை உறுவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரப்பட உள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளிலும் கணினி பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்காக 492 மையங்களில் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் நீட் உள்ளிட்ட மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள முடியும். மேலும் சிபிஎஸ்சி தரத்திற்கு நிகராக அரசு பள்ளியில் கல்வித்தரம் உயர்த்த படஉள்ளது. இனி தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் இருக்காது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. இந்த கார்டில் ஆதார் எண் மற்றும் மாணவர்கள் ப்ளட் குருப் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதியப்படும். மாணவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் 48 மணிநேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க இந்த கார்டு பயன்படும். ரூபாய் 2 லட்சம் மதிப்பிலா விபத்து காப்பீடு செய்யப்படும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களுக்கு 2013ல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.7500 தொகுப்பு ஊதியதிலும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்துள்ள கட்டடத்தை அகற்றி ரூ. 2 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்ட பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளை அமைச்சர் வழங்கினார்.விழாவில் தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் அனிதா, மாவட்ட அறிவியல் அலுவலர் நவராம்குமார், முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியஆதித்தன், பள்ளி கமிட்டி அறங்காவலர் சுந்தரம், ஒருங்கிணைப்பாளர் ஜீனத், நாராயணன், கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், அரவு மத்தவமனை தலைமை மருத்தவர் பொன்ரவி, அதிமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்தின் மற்றும் பள்ளி ஆசிரியர் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் அரசி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து