முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திருநெல்வேலியில் சர்வதேச பேரிடர் தினத்தையொட்டி, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணிகள் நடைபெற்றது. சைக்கிள் பேரணிதிருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை குறைப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர்  சந்தீப் நந்தூரி  கையெழுத்திட்டு, தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு குறித்து சத்தி சாய் சேவா நிறுவனத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கு நடைபெற்றது.

சைக்கிள் பேரணி

முன்னதாக, சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம்  தொடங்கி வைத்தார். இப்பேரணியில், கதிட்ரல் மேல்நிலைப்பள்ளி, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, சேவியர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியானது, வ.உ.சி. மைதானத்திலிருந்து புறப்பட்டு, லூர்தநாதன் சிலை வழியாக தெற்குபஜார், குழந்தை ஏசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பாண்டி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு, மாவட்ட தொடர்பு அலுவலர் தேவபிச்சை, பாளையங்கோட்டை வட்டாட்சியர் தங்கராஜ், சத்ய சாய் சேவ நிறுவன பேரிடர் தொடர்பாளர்/பயிற்சியாளர் சுரேஷ் உள்பட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து