முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் லீக் தொடர்களை நடத்த ஐ.சி.சி. ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து: சர்வதேச டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் லீக் தொடர்களை நடத்த ஐ.சி.சி. ஒப்புதல் அளித்துள்ளது.

கவுன்சில் கூட்டம்
டி-20 கிரிக்கெட் போட்டி வந்த பிறகு டெஸ்ட்  போட்டிக்கு மவுசு குறைந்து விட்டது. இதனால் டெஸ்ட் போட்டிகளை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வர  சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஆலோ சனை நடத்தி வந்தது. உலக கோப்பை போட்டி போன்று உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி மற்றும் ஒருநாள் போட்டி லீக் ஆகியவை நடத்த ஆலோசித்தனர். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் சர்வதேச கிரிக் கெட் கவுன்சில் கூட்டம் நடந்தது.

உறுப்பினர்கள் ஆதரவு
இதில் உலக டெஸ்ட் சாம் பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் லீக் ஆகியவற் றுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். அதன்படி தர வரிசை பட்டியலில் முதல் 9 இடங்களில் இருக்கும் அணி கள் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் விளையாடும். உலக டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு அணியும் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். உள்ளூரில் 3 தொடர், வெளி நாட்டில் 3 தொடர்களில் விளையாடும்.

5 நாள் போட்டியாக...
ஒரு தொடரில் குறைந்த பட்சம் 2 டெஸ்ட், அதிக பட்சமாக 5 டெஸ்ட் போட்டி இருந்தும் லீக் போட்டிகள் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதும். 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை போட்டிகள் நடக்கும்.  2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு உலக டெஸ்ட் போட்டி தொடங்கும். 2021-ம் ஆண்டு ஜூனில் இறுதி போட்டி இங்கிலாந்தில் நடக்கிறது. அனைத்து போட்டிகளும் 5 நாள் போட்டியாகவே நடத்தப்படும்.

13 அணிகள் பங்கேற்கும்...
இதே போன்று ஒரு நாள் கிரிக்கெட் லீக் சாம்பியன்ஷிப் போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 13 அணிகள் பங்கேற் கும். ஒவ்வொரு அணியும் தலா 8 ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும். உள்நாடு, வெளிநாட்டில் தலா 4 தொடர்கள் நடக்கும். ஒவ்வொரு தொடரும் 3 போட்டிகளை கொண்டதாக இருக்கும். ஒருநாள் கிரிக்கெட் லீக் தொடர் 2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நடக்கும். இப்போட்டி தொடர் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற வழி வகுக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து