முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலியை கரம்பிடிக்கிறார் பென் ஸ்டோக்ஸ்!

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ். இவர் தனது காதலி கிளார் ரேட்கிளிஃபை இன்று திருமணம் செய்கிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் நைட் கிளப்பில் ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து ஆஷஸ் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டிவி நடிகையும் மாடலுமான கேத்தி பிரைசின் மகன் ஹார்வேவை கிண்டல் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதற்கு மன்னிப்புக் கேட்டார் ஸ்டோக்ஸ். இதற்கிடையே பென் ஸ்டோக்சின் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை நியூ பேலன்ஸ் நிறுவனம் ரத்து செய்தது.

இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, தனது காதலி, கிளார் ரேட்கிளிஃபை இன்று திருமணம் செய்கிறார் ஸ்டோக்ஸ். இவர்கள் திருமணம் சோமர்செட்டில் உள்ள தேவாலயத்தில் நடக்கிறது. பென் ஸ்டோக்ஸ் திருமணம் செய்துகொள்ள இருக்கும் கிளார், ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு அம்மா என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து