முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெசவாளர் முன்னேற்ற சேவை மையம் மற்றும் கைவினை விற்பனை முகாம் மத்திய இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      கன்னியாகுமரி

மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர்    பொன்இராதாகிருஷ்ணன் , நெசவாளர் முன்னேற்ற சேவை மையம், கைவினை பொருட்கள் ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ், கைவினை விற்பனை முகாமினை, குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட திங்கள்நகர், குமார் திருமண மண்டபத்தில்  குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார். 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் அன்று தொடங்கிய சுதேசி இயக்கத்தின் நினைவாக, கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி  தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும் தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதலாவது தேசிய கைத்தறி தினமானது, 07.08.2015 அன்று சென்னையிலும், இரண்டாவது தேசிய கைத்தறி தினமானது, 07.08.2016 அன்று வாரணாசியிலும்;  பாரத பிரதமர் அவர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டது. 3-வது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு, நாகர்கோவில் சரகத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர், சென்னை அவர்களால் ரூ.30.00 லட்சம் விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டதில், ரூ.30.20 இலட்சம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு, குறியீடு எய்தப்பட்டுள்ளது.  

தேசிய ஒருங்கிணைந்த கைத்தறி குழும வளர்ச்சித் திட்டம் 2015-16ன் கீழ், கன்னியாகுமரி மாவட்டத்தில், குருந்தன்கோடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்ட மதிப்பீடு ரூ. 78.70 இலட்சம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு   ரூ. 74.36 இலட்சம் மற்றும் பயனாளிகளின் பங்கு ரூ. 4.34 இலட்சம் ஆகும்.  இதில், 4 நெசவாளர் கூட்டுறவு சங்கங்களைச் சார்ந்த 510 நெசவாளர்கள் பயனாளிகளாக உள்ளனர்.  2015-16ம் நிதியாண்டில், ரூ. 40.08 இலட்சம் பெறப்பட்டு முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், 40 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.  இச்சங்கங்களில் 6,619 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 2017-18-ம் நிதியாண்டில், 30.09.2017 வரை ரூ. 900.06 இலட்சம் மதிப்பிலான கைத்தறி இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, ரூ. 600.14 இலட்சம் மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  மேற்படி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம், முத்ரா திட்டம், ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டம், சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், ஓய்வூதிய திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில், 18,000 கைவினை கலைஞர்கள் உள்ளனர்.   ஆண்டுக்கு ரூ. 20 கோடி மதிப்பிலான கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைவினை கலைஞர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம், முத்ரா திட்டம்,  அடையாள அட்டை வழங்கும் திட்டம், ஆயுள் காப்பீட்டு கழகம் மூலம் குழு காப்பீடு திட்டம், இந்திராகாந்தி திறந்த வெளி பல்கலைக்கழகம் மூலம், இலவச கல்வி வழங்கும் திட்டம் மற்றும் தேசிய விருதுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர்  எஸ். சையத் தாகூத், உதவி இயக்குநர் (கைவினை பொருட்கள்)  எல். பாலு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்  எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து