முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தம் ரத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சனிக்கிழமை, 14 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: ஈரானுடன் செய்து கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள டிரம்ப் அதனை அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான ஒப்பந்தம் என்றும் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க  டிரம்ப் வெள்ளிக்கிழமை கூறியபோது, "ஒபாமா பதவி காலத்தில் ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை தொடர முடியாது. அந்த ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றில் போடப்பட்ட மிக மோசமான ஒப்பந்தம்” என்றார்.

அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனைகளை நடத்திவரும் ஈரானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுடான அணுஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.

இந்த நிலையில் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்க இருப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

ஈரான் அணுஆயுத சோதனைகள் மேற்கொள்வதை தடுப்பதற்காக இந்த புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்பட இருப்பதாகவும், இதற்கு அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் டிரம்ப் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து