முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க இலங்கையிடம் மத்திய அரசு வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை இலங்கை மீன் வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. “இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் விடுவிக்க வேண்டும்” என்று மகிந்த அமரவீரவிடம் அமைச்சர் ராதாமோகன் வலியுறுத்தினார்.

இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியில் இருநாட்டு மீனவ பிரதி நிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து நவம்பர் 5-ம் தேதி இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சர்களின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து பேச கூட்டு செயல்திட்ட குழு கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறையும் இரு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தை 6 மாதங்களுக்கு ஒரு முறையும் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி இந்திய, இலங்கை வெளியுறவு அமைச்சகங்கள், மீன் வளத் துறை, கடற்படை, கடலோர காவல் படை பிரதிநிதிகள் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இந்திய, இலங்கை அமைச்சர்கள் நிலையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில்  நடைபெற்றது. இதில் மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங், இலங்கை மீன் வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் இரு நாடுகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அண்மை காலங்களில் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவித்த இலங்கை அரசுக்கு இந்தியா சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் பாக் ஜலசந்தி பகுதியில் சுருக்குமடி மீன்பிடிப்பை தடை செய்வது தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்டு வரும் நட வடிக்கைகள் குறித்து இலங்கை தரப்பிடம் எடுத்துரைக்கப்பட்டது. பாக் ஜலசந்தியில் சுருக்குமடி மீன் பிடிப்புக்கு தமிழக அரசு ஏற்கெனவே தடை விதித் திருப்பதாகவும் அப்பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்க ளின் மாற்று வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்ள இரு நாடுகளிடையே ஹாட்லைன் தொலைபேசி வசதியை ஏற்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்திய, இலங்கை அமைச்சர்கள் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர். இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் வலியுறுத்தினார். தற்போது இலங்கை சிறைகளில் சுமார் 47 தமிழக மீனவர்களும் சுமார் 140 படகுகளும் உள்ளதாக மீனவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து