முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை : சுஷ்மா

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் :  வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை; அவர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் பாஜக மகளிர் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்போது வாக்களிக்க வேண்டுமெனில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் தேர்தலில் வாக்களிக்க இந்தியாவுக்கு வர வேண்டும். ஆனால் விரைவில் இந்த நடைமுறையில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. வாக்காளர்களாக பதிவு செய்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு பதில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை வாக்களிக்க அனுமதிக்கலாம்.

இதற்கான அத்தாட்சி கடிதத்தை அனுப்பி வைத்தாலே போதும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க முடியும் என்கிற சூழல் வர இருக்கிறது. மத்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் 2 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சர் என்கிற வகையில் நானும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இடம்பெற்றுள்ளோம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம். இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து