முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் 115 ஆண்டுகளுக்குப்பின் வரலாறு காணாத மழை: 9 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : பெங்களூரில் 115 ஆண்டுகளுக்குப்பின் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆக  உயர்ந்துள்ளது.

பெங்களூர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் நல்ல மழை பெய்யும். பருவநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 2005-ம் ஆண்டுக்குப்பின் பெங்களூரில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் வறட்சி நிலவியது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பெங்களூரில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2 மாதமாக விட்டு விட்டு பலத்த மழை கொட்டுகிறது.  அங்கு வழக்கமான குளிர் நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது. இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய விடாமல் கொட்டித் தீர்த்தது. இதனால் நகரில் பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. போக்குவரத்தும் முடங்கியது.

இந்த மழைக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், சுவர் இடிந்தும், கால்வாயில் விழுந்தும் 9 பேர் பலியானார்கள். குறிப்பாக பெங்களூரின் மேற்கு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது. வெள்ளப்பகுதிகளை அரசியல் கட்சி தலைவர்கள் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரி சதானந்த கவுடா ஆகியோர் சுவர் இடிந்து பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு பா.ஜனதா சார்பில் தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் 115 ஆண்டுகளுக்குப்பின்பு வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து