முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஜய் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் நேற்று காலை  சந்தித்தார்.

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வரும் புதன்கிழமை திரைக்கு வர இருக்கிறது. படத்தில் உள்ள சில காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி இன்னும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. இதனால், படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகுமா? என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்தது. இந்தச் சூழ்நிலையில், நேற்று நடிகர் விஜய், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்றார். அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினார். அப்போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து