முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 86 ஆவது பிறந்தநாள் விழா:

ஞாயிற்றுக்கிழமை, 15 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த தினத்தை இளைஞா்கள் எழுச்சி தினமாக தமிழக அரசு அறிவித்திருந்ததையொட்டி அப்துல் கலாமின் 86 ஆவது பிறந்த நாளான நேற்று ராமேசுவரம் அருகே தேசிய நினைவகத்தில் அமைந்துள்ள அவரது சமாதியில்  தமிழக அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

  இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 86 ஆவது பிறந்தநாள் விழா  ராமேசுவரம் தாலுகா தங்கச்சிமடம் பஞ்சாயத்து உட்பட்ட பகுதியான பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.இந்த விழாவையொட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தேசிய நினைவகம் முழுவதும் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.அதுபோல மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியையொட்டி இவ்வளாகத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் சமாதிற்கு தமிழக தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவா் நடராஜன், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர்கள் மலர் வளையம் வைத்து பின்னர்  மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்கள்.இவர்களுடன் ராமநாதபுரம்,ராமேசுவரம்,மண்டபம்,பாம்பன் ஆகிய பகுதிகளை சேர்ந்த அதிமுக கட்சியின் நிர்வாகிகளும்,தொண்டர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.மேலும் இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் பேபி, ராமேசுவரம் துணை வட்டாசியர் அப்துல்ஜபார்,தங்கச்சிமடம் பஞ்சாயத்து செயலர் கதிரேசன் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி ராமேசுவரம் அதிமுக பிரமூரர்கள் கே.கே.அர்ச்சுணன்,மகேந்திரன்,முத்தாண்டி,மகேஸ்வரன்,மண்டபம் சீமான் மரைக்காயர் உள்பட பார்வையாளர்கள் ஏராளமான கலந்துகொண்டனர்.
 அமைச்சா் மணிகண்டன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது:

இளைஞர்களின் கனவு நாயகனாக விளங்கும் மேதகு முன்னாள் குடியரசுத் தலைவா் மறைந்த பாரத ரத்னா டாக்டா;.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் அறிவியல் துறையில் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், டாக்டா;.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவா;களின் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாளை ‘இளைஞர்கள் எழுச்சி தினமாக கொண்டாட வேண்டுமென அறிவித்தார்கள்.அதன்பேரில் இன்றைய தினம், இராமேஸ்வரம் பேய்க்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள டாக்டா;.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தில் அண்ணாருக்கு மாரியாதை செலுத்தப்பட்டது. இளைஞர்கள் அப்துல் கலாம் அவர்களின் சாதனைகளை வழிகாட்டுதலாகக் கொண்டு அவரது கொள்கைகளையும் பண்புகளையும் பின்பற்றிட வேண்டும். மேலும், அவரது பொன்மொழிக்கு ஏற்றவாறு உயர்ந்த இலட்சியத்தினை கணவாக கொண்டு, அதனை அடைந்திட உண்மையாக உழைத்திட வேண்டும் என இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து