முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது: கர்ப்பிணி உட்பட 6 பேர் பலி

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : பெங்களூருவில் சிலிண்டர் வெடித்ததில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் பலியாகினர்.

இது குறித்து தீயணைப்புத் துறை தரப்பில் கூறப்படுவதாவது,

 "பெங்களூருவில் உள்ள எஜிபுரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் மொத்தம் 6 வீடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் குடியிருப்பில் இருந்த வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதில், அந்தக் கட்டிடம் தரைமட்டமானது. இந்த விபத்தில் ஷ்ரவண் (30) அவரது கர்ப்பிணி மனைவி அஸ்வினி (21), ரவிச்சந்திரன் (48), ஹரிபிரசாத் (19), பவன் கல்யாண் (18) ஆகியோர் பலியாகினர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான குடியிருப்பு மிகவும் குறுகலான பகுதியில் அமைந்திருப்பதால் மிகுந்த சிரமத்துக்கு இடையே மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது". 

2 மணிநேரத்துக்குப் பின் சிறுமி உயிருடன் மீட்பு

இந்நிலையில் கட்டட இபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமியை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர். சுமார் 2 மணி நேரத்துக்குப் பின் அந்த சிறுமி உயிருடன் மீட்பட்டுள்ளார். சிறுமியை தீயணைப்புத்துறையினர் உயிருடன் வெளியே கொண்டுவந்த போது அங்கே குழுமியிருந்தவர்கள் விசில் அடித்தும் கைத்தட்டியும் ஆரவாரம் செய்தனர். அந்த சிறுமியின் பெற்றோர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். இதனால் சிறுமியை தத்தெடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து