முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு 3 பாகிஸ்தானியருக்கு விசா: மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : கல்லீரல் மாற்று சிகிச்சை  செய்ய 3 பாகிஸ்தானியருக்கு விசா வழங்கி  மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்துள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் நலனை காக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதேபோல் இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை வைத்து கொள்ளாவிட்டாலும், அந்நாட்டவருக்கு மருத்துவ விசா கிடைக்க மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறார்.

இந்நிலையில், நசீம் அக்தர் என்ற பாகிஸ்தான் பெண்ணின் மகன், தனது தாய் இந்தியாவில் சிகிச்சை பெற விசா வழங்க உதவி செய்யும்படி வேண்டு கோள் விடுத்திருந்தார். அதேபோல், ஷபீர் அகமது ஷா என்பவரின் மகன் அலி அசதுல்லாவும், தனது தந்தைக்கு விசா கிடைக்க உதவும்படி கேட்டிருந்தார். இருவரும் இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள் வதற்காக விசா கேட்டிருந்தனர்.

இதையடுத்து ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது, ‘‘உங்கள் தாய்க்கு விசா வழங்க இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை அறிவுறுத்தி இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும், “உங்கள் (அலி அசதுல்லா) தந்தையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு விசா வழங்க இந்திய தூதரகத்திடம் கூறியிருக்கிறோம். நீங்கள் அங்கு அணுகவும்” என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பைசலாபாத்தை சேர்ந்த எம்.மொசீன் என்பவர், தனது உறவினர் பர்சானா இஜாஸ் என்பவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். அவருக்கு இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய விசா வழங்க உதவ வேண்டும் என்று சுஷ்மாவுக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை பார்த்த சுஷ்மா சுவராஜ், பர்சானாவுக்கு மருத்துவ விசா வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து