முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் 2019 தேர்தலை வழிநடத்த வசதியாக இருக்கும் - சல்மான் குர்ஷித் பேட்டி

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வழிநடத்த வசதியாக இருக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள் ளார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வழிநடத்துவதற்கு அவருக்கு வசதியாக இருக்கும் - சல்மான் குர்ஷித்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை விரைவில் தேர்ந்தெடுக்கப் படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித்  செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றும் அதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வழிநடத்துவதற்கு அவருக்கு வசதியாக இருக்கும்.

மேலும் ராகுல், காங்கிரஸ் கட்சித் தலைவரானால் சமூகத்தில் உளவியல் ரீதியிலான மாற்றம் ஏற்பட்டு, அதன்மூலம் அதிகப்படியான இளைஞர்களை ஈர்க்க முடியும். அத்துடன் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் உற்சாகம் பிறக்கும்.  இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து