முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீது தாக்குதல்: கேரள முதல்வர் பினராயி அச்சமூட்டும் சூழலை உருவாக்கி வருவதாக பாரிக்கர் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

கொல்லம் : நாட்டை வளர்ச்சி பாதையில் மத்திய அரசு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் கேரள முதல் மந்திரி அச்சமூட்டும் சூழலை உருவாக்கி வருகிறார்.

கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சி செய்து வருகிறது. அங்கு நடைபெறும் அரசியல் வன்முறை மற்றும் ஜிகாத் ஆகியவற்றை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சியினர்  ஜன ரக்ஷா யாத்ரா என்ற பெயரில் பேரணி ஒன்றை நடத்தினர். இரு வாரங்கள் வரை நடைபெறும் இந்த பாதயாத்திரை பேரணியை பாரதீய ஜனதா மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் தலைமையேற்று நடத்தி வருகிறார்.

இந்த பேரணியில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, இடதுசாரி கட்சியினரால் பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அவர்களால் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள கறைபடிந்த தோற்றத்தினை நீக்க கேரள மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசானது நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும்பொழுது, முதல்வர் பினராயி விஜயன் அச்சமூட்டும் சூழலை உருவாக்கி வருகிறார் என்றும் குற்றம் சாட்டி பேசியுள்ளார்.

இந்தியா வளர்ச்சிக்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த உண்மையை உலகம் முழுவதுமுள்ள மக்கள் ஏற்று கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து