சென்னை மாவட்டத்தில் இனிப்பு மற்றும் கார வகைகளை வாடிக்கையாளர்கள் வாங்கும்போது கடை பிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு முறைகள் பற்றி கலெக்டர் அன்புச்செல்வன் அறிவுரை

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      சென்னை

சென்னை மாவட்டத்தில் இனிப்பு மற்றும் கார வகைகளை வாடிக்கையாளர்கள் வாங்கும்போது கடை பிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு முறைகள் பற்றி கலெக்டர் அன்புச்செல்வன் உஷார் படுத்தியுள்ளார். இது சம்பந்தமாக அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

* அதிகப்படியான செயற்கை வண்ண நிறமிகள் (Artificial Colouring Agent) கொண்டு இனிப்பு பொருட்கள் தயாரிக்கப்பட்டு இருந்தால் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும்.

* இனிப்பு வகைகளை பரிசு பொருட்களாக பேக்கிங் செய்து விற்பனை செய்யும் போது அதில் பால் வகையான இனிப்புகளை மற்ற இனிப்புகளோடு கலந்திருந்தால் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பாலால் செய்யப்பட்ட இனிப்புகளின் சேமிக்கும் நிலை மற்றும் காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.

* ஈக்கள் மொய்க்கும் வண்ணம் இனிப்பு மற்றும் கார வகைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். * துர்நாற்றம் வீசும் இனிப்பு மற்றும் கார வகைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

* உணவு அங்காடிகளில் வாங்கும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு முறையான ரசீது பெற்றிருத்தல் வேண்டும்.

* உணவு கையாளும் பணியாளர்கள் தூய்மையான ஆடைகள் அணிந்தும் நகங்களை சீர் செய்தும், தலைகவசம், கையுறையுடன் இனிப்பு கார வகைகளை கையாளுகின்றனர் என்பதை உறுதி செய்தல் வேண்டும். லைசென்ஸ், பதிவு சான்றிதழ் சரிபார்க்கவும்

* இனிப்பு கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தும் சமையல் எண்ணெய், நெய் விபரங்களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைத்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* நுகர்வோர் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை கூடங்களில் பொட்டலமிட்டு வாங்கும் பொழுது உணவு சேமிப்புக்குரிய தரத்துடன் உள்ள பிளாஸ்டிக் கொள்கலன்களில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

* இனிப்புகளை பேக்கிங் செய்யும் பெட்டிகளின் மேல் அந்த இனிப்பின் சேர்மான பொருட்கள் இதர விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

* பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளில் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவுச் சான்றிதழ் எண் உள்ளதை உறுதி செய்து வாங்க வேண்டும்.

* பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிப்பாளரின் முழு முகவரி அச்சிட்டு இருத்தலை உறுதி செய்தல் வேண்டும். காலாவதியாகும் நாள் மற்றும் நுகர்வோர் சேவை தொலைபேசி எண் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளதை உறுதி செய்து வாங்க வேண்டும்.

* பொட்டலங்களில் பேக்கிங் செய்து விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி அச்சிட்டு இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

* மேலும் நுகர்வோர்கள் உணவுப் பொருட்களுக்கான தரம் பற்றிய குறைபாடுகளுக்கு உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்அப் புகார் எண் 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து