பெரம்புர் ரயில்வே நிலையத்தில் தீபாவளி முன்னிட்டு விழிப்புணர்வு

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      சென்னை
pmb

சென்னை பெரம்புர் ரயில் நிலைத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு போன்ற பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தினர்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

 அதன் ஒரு பகுதியாக இன்று பெரம்புர் ரயில் நிலையத்தில் பெரம்புர் ரெயில்வே ஆய்வாளர் பச்சையம்மாள், வில்லிவாக்கம் ரயில்வே ஆய்வாளர் அன்கூர் தியாகி, ஆவடி ரயில்வே ஆய்வாளர் நந்த் பகதூர் தலைமையிலான காவலர்கள் இணைந்து பயணிகளிடம் எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு போன்ற பொருட்கள் கொண்டு வருவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினர். திருடர்கள் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய பயணிகளை குறிவைத்து செயின் மற்றும் செல்போன் பறிப்புகளில் ஈடுபடுவதை தவிர்க்க விழிப்புணர்வு வேண்டும் என்றும் வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர்.

ரயில் பயணத்தில் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு வருபவர்கள் மீது ரயில்வே சட்டம் 164-ன் படி 1000 ருபாய் வரை அபராதம் அல்லது அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கபடும் என்றும் அறிவுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து