முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசு தமிழகத்தை டெங்கு இல்லா மாநிலமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது அரசு முதன்மை செயலாளர் எஸ். கிருஷ்ணன் பேச்சு

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      விருதுநகர்
Image Unavailable

   விருதுநகர்.- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ர்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்.  முன்னிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தது அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அரசு முதன்மை செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி மற்றும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்)  எஸ். கிருஷ்ணன்,  தலைமையில்   நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி மற்றும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்)  தெரிவிக்கையில்,
தமிழக அரசு தமிழகத்தை டெங்கு இல்லா மாநிலமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தொடர்நடவடிக்கையின் மூலம் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டமாக திகழ்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும்; ஏடிஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், வாரந்தோறும், ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஏடிஸ்  கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுசமயம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மருத்துவ அலுவலர்  தலைமையிலான  குழுவினர் பள்ளி இறைவணக்கத்தின் போது காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுகாதார உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் இதரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் நில வேம்பு கசாயம், உப்புக் கரைசல் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.  அத்துடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட உள்நோயாளிகளுக்கு சாப்பாட்டு கஞ்சி சேர்த்து வழங்கப்படுகிறது.
ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை தினசரி கழுவி சுத்தம் செய்து பயன்படுத்துவுடன் கொசுக்கள் உள்ளே புகா வண்ணம் மூடி வைத்திடுவது, தங்கள் வீட்டின் வெளியிலும், சுற்றுப்புறத்திலும் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதோடு தேவையற்ற மண்பாண்டங்கள், உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வது, வீட்டில் உள்ள கீழ் நிலை நீர் சேமிக்கும் தொட்டியை மூடுவது, போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
வைரஸ் காய்ச்சல் நோய் குறித்து எந்தவித அச்சமும், பயமும் கொள்ளத் தேவையில்லை என்றும், அனைத்து காய்ச்சல் வகைகளையும் ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டால், முற்றிலுமாக குணப்படுத்த முடியும். காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக  எவ்வித  மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சைப் பெறவும். மேலும், கொசு ஒழிப்பு பணிக்கென தங்கள் வீடுகளை நாடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும்.
வடகிழக்கு பருவழையானது இந்தாண்டு டிசம்பர் மாதம் இறுதிவரை பெய்வதற்க்கான வாய்ப்பு உள்ளதால். மழைநீர் வீணாகாத வண்ணம் கண்மாய்கள், ஓடைகள், வரத்துக்கால்வாய்களை தூய்மைப்படுத்தி மழைநீரை சேகரிப்பதற்கான நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறையினர் கண்மாய் உடைப்பு ஏற்பட்டால் சரிசெய்வதற்கான மணல் மூடைகள் மூங்கில் கம்புகள் ஆகியவற்றை அருகில் உள்ள பண்ணை உரிமையாளர்களின் உதவியுடன் பண்ணைகளிலேயே சேமித்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தங்களிடம் உள்ள பவர்ஷா மற்றும் கட்டர் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை தயாராக வைத் ்க வேண்டும். அதிகளவில் மழைபெய்து வருவதால் மழைநீரினை சேமித்து பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி தினசரி வழங்குவதற்கு நகராட்சி துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 வேளாண்மை துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்பு கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. வேளாண் இடுபொருட்கள் பொதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை அதிக அளவில் சேர்ப்பதற்கு எளிமையான வழிமுறைகளை ஏற்படுத்த வேளாண்மைதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீர்ப்டிப்பகுதி மற்றும் வரத்துக்கால்வாய் பகுதிகளில் உள்ள கருவேலம் செடிகளை அகற்றுவதற்காக உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் எந்த பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவரின் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். மேலும், கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என அரசு முதன்மை செயலாளர் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி மற்றும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்) அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, அரசு முதன்மை செயலாளர்(திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி மற்றும் விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்) அவர்கள் வடமலாபுரம், நமஸ்கிரித்தான்பட்டி ஆகிய கிராமங்களில் வீடுவீடாகச் சென்று குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளத, அசுத்தமாக உள்ளதா எனவும், எம்.புதுப்பட்டி மற்றும் கன்னிச்சேரிபுதூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமான படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும், விருதுநகர் தலைமை அரசு மருத்துவமனையில் இரத்த பகுப்பான் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர்  சி. முத்துக்குமரன், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர்  தி.திலகவதி, இணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.மனோகரன், துணை இயக்குநர்கள் மரு.எ.ராம்கணேஷ், மரு.பழனிச்சாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  காதர்மீர் உட்பட பல்வேறு அரசுத் துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து