முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பூங்காவை முறையாக பராமரிக்காமல் டெங்கு கொசுப்புழு உற்பத்தி : ஊழியரை தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவு

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து சிவாஜி நகர், செவப்பநாயக்கன்வாரி, சீனிவாசபுரம் நடுத்தெரு, சிவகங்கை பூங்கா ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, நேற்று (16.10.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 டெங்கு கொசு

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட சிவாஜி நகரில் தனித்தனியாக ஒவ்வொரு வீட்டிலும் ஆய்வு மேற்கொண்டு இரண்டு வீடுகளில் வீட்டின் பயன்பாட்டிற்காக டிரம் பிடித்து வைக்கப்பட்டுள்ள தண்ணிரீல் டெங்கு கொசு புழு கண்டறியப்பட்டதால், இரண்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

ரயில்வே லையன் கீழ் உள்ள கழிவு நீர் கால்வாயினை முழுமையாக தண்ணீர் தேங்கா வண்ணம் தூர் வாரி சுத்தம் செய்ய மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். செவப்பன்நாயக்கன் வாரி சீனிவாசபுரம் நடுத்தெருவில் வீடுகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஒரு வீட்டின் மருத்துவ கழிவு அதிக அளவில் காணப்பட்டதால், மாட்டுக் கொட்டகையில் பிடித்து வைக்கப்பட்டிருந்த நீரில் டெங்கு கொசு புழுக்கள் காணப்பட்டதாலும். வீட்டின் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

பின்னர் ஜெபமாலைபுரத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் குப்பை கிடங்கிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் முறையாக பராமரிக்க வேண்டுமெனவும், குப்பைகளை முறையாக தரம் பிரிக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சி சிவகங்கை பூங்காவை ஆய்வு மேற்கொண்டு குடிநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி, நீர் தெளிப்பான், வெட்டப்பட்ட பழைய கட்டைகளில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பதை கண்டறிந்த மாவட்ட கலெக்டர் சிவகங்கை பூங்காவினை முறையாக பராமரிக்காத மாநகராட்சி பணியாளர் தற்காலிக பணியிட நீக்கம் செய்ய மாநகராட்சி உயர் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அரசு அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தினை தூய்மையாக பராமரிக்காத பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஸஆ.அண்ணாதுரை, அறிவுறுத்தினார். இதே போல் தஞ்சாவூர் ஒன்றியம் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மற்றும் மாநகராட்சி 42வது வார்டு குழந்தையம்மாள் நகரில், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் , வீடுவீடாக சென்று டெங்கு ஒழிப்பு பணியினை மேற்கொண்டனர். குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் பொது மக்களிடம் டெங்கு ஒழிப்பு உறுதிமொழியினை மேற்கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தினை வழங்கினார்.

இவ்வாய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி மருத்துவ அலுவலர் நமாச்சிவாயம், உதவி பொறியாளர் ரமேஷ், வட்டாட்சியர் தங்கபிரபாகரன், ரெட் கிராஸ் உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து