முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கைகள் கழுவும் தினத்தை முன்னிட்டு, கை கழுவும் நிகழ்ச்சி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  ராஹ_ல்நாத்   முன்னிலையில், தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் (ஊரகம்) சர்வதேச கைகள் கழுவும் தினத்தை முன்னிட்டு, கை கழுவும் நிகழ்ச்சி, நாகர்கோவில், வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தெரிவித்ததாவது:-ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 15-ஆம் தேதி, சர்வதேச கைகள் கழுவும் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில், பொதுமக்கள் மற்றும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கு கை கழுவும் முறைகள் குறித்து, செயல் முறைகள் அளிக்கப்படுகிறது.  மேலும், கை கழுவும் பழக்கத்தினை கடைபிடித்து வந்தால், வயிற்றுபோக்கு (டையரியா) போன்ற நோய்கள் ஏற்படாது.  மேலும், கை கழுவும் பழக்கத்தினை கடைபிடித்தால், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து, அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் (ஊரகம்) பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உலக கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, முதுகலை ஆசிரியை (ஆங்கிலம்) திருமதி மகோநதா மேரி தயாசீலி  மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்  சுரேஷ்குமார்  ஆகியோர்கள் விளக்கவுரையாற்றவுள்ளார்கள்.  இவர்கள் வழங்கும் உரையை நீங்கள் கேட்பதோடு, மனதில் ஆழமாக பதித்து கொள்ள வேண்டும்.  மேலும், உங்களது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர்களிடம், கை கழுவும் பழக்கத்தினால், ஏற்படும் நன்மைகள் குறித்து, அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும், டெங்கு காய்ச்சல் உருவாக்கும் எடிஎஸ் கொசுவை உற்பத்தியாகாமல் தடுப்பதற்கு, தங்களது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியினை மூடி வைக்க வேண்டும். குறிப்பாக, தங்களது வீடு மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.  மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் வீட்டின் சுற்றுப்புறத்திலுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுவதோடு, டையர்கள், ஆட்டுரல்கள், தேங்காய் மட்டை ஆகியவற்றில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர்  தெரிவித்தார்.முன்னதாக, கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  ராஹ_ல்நாத்   முன்னிலையில், தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் (ஊரகம்) சர்வதேச கைகள் கழுவும் தினவிழா நிகழ்ச்சியில், முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் என்ற உறுதிமொழியினை, அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் எடுத்துக்கொண்டனர். பின்னர், கலெக்டர் , பள்ளி மாணவ, மாணவியர்கள், கை கழுவ ஏதுவாக, பள்ளி தலைமையாசிரியர் திருமதி மு. பெர்லா ஜெயந்தி அவர்களிடம் கை கழுவும் திரவியத்தினை வழங்கினார்.  அதனை தொடர்ந்து, பள்ளி இசை ஆசிரியை திருமதி ப. சரஸ்வதி , உலக கை கழுவும் தினத்தின் நன்மைகள் குறித்து, பாடலை பாடினார்.அதனை தொடர்ந்து, கலெக்டர் , பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, நிலவேம்பு குடிநீரினை வழங்கினார். பின்னர், கலெக்டர் , பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகளை நாட்டி, உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, பள்ளி வளாகத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இப்பேரணியானது, வெள்ளாளர் வடக்கு தெரு, வடசேரி மனோன்மணி சுந்தரனார் தெரு, ஆராட்டு ரோடு வழியாக, மீண்டும் பள்ளிக்கு சென்று நிறைவடைந்தது.  இதில், சுமார் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.   இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி எஸ். பாலா,                      துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு. மதுசூதனன், மாவட்ட கல்வி அலுவலர் (நாகர்கோவில்)  த. ஆறுமுகம், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்)  வில்வம், சித்தா மருத்துவ அலுவலர் மரு. து. அர்ஜூனன், ஹோமியோபதி மருத்துவ அலுவலர் மரு. ஜோதி நடராஜன், மரு. மஞ்சு மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து