முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மலை பகுதியில் சந்தன மரம் கடத்திய 2 பேர் கைது: 4 பேருக்கு வலை

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      திருநெல்வேலி

தமிழக கேரள எல்லைப்பகுதியான தென்மலை வனப்பகுதியில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 2 பேர்களை கேரள வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.தமிழக கேரள எல்லையான செங்கோட்டை – புளியரை தென்மலை வனப்பகுதியில் உள்ள கடமான்பாறை என்ற வனப்பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் சந்தன மரங்கள் அதிக அளவில் உள்ளது. எனவே இந்த பகுதியை சந்தனமரக்காடு என்றும் அழைப்பர். இங்குள்ள சந்தன மரங்களை பாதுகாக்க கேரள வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இங்குள்ள விலை உயர்ந்த சந்தன மரங்களை பாதுகாக்க கேரள வனத்துறையினர் அந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். ஆனாலும் கேரள வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பையும் மீறி ஒரு கும்பல் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக கேரள வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதனை உறுதிப்படுத்தும் வகையில் வனப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சில காட்சிகளும் பதிவாகியுள்ளது. அதனை பார்த்த கேரள வனத்துறையினர் இரவு பகலாக அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தென்மலை கடமான்பாறை பகுதியில் கேரள மாநிலம் ஆரியங்காவு வனத்துறை ரேஞ்சர் ஜியாஸ் ஜமாலுதீன் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் வனத்துறையினரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை வனத்துதுறையினர் விரட்டிச் சென்றனர். வனத்துறையினர் துப்பாக்கி முனையில் 2 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். 4பேர் தப்பி ஓடிவிட்டனர்.பிடிபட்ட இருவரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில்  நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த நாராயணன் (31), தங்கத்துரை (40) என்றும், தப்பியோடிவர்கள் அதே பகுதியை சேர்ந்த கோட்டூர்சாமி, இசக்கித்துரை, பவுடன், வசந்த்குமார் என்றும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் கொடுத்த தகவலின் பேரில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள சந்தனமரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய் 4 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து