முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சத்துணவு அமைப்பாளருக்கான பணிநியமன ஆணைகளை கலெக்டர் கு.ராசாமணி வழங்கினார்

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(16.10.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து பணியிடைக்காலமான பட்டம்மாள் என்பவரின் மகள் கல்பனா என்பவருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளருக்கான பணிநியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி, வழங்கினார்

பணி ஆணை

 திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், சின்னப்பள்ளிபாளையம், மான்ய துவக்கப்பள்ளியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து பணியிடைக்காலமான பட்டம்மாள் என்பவரின் வாரிசுதாரும், மகளுமான வெ.கல்பனா என்பவருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளருக்கான பணிநியமன ஆணையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். திருச்சிராப்பள்ளியில் மாவட்ட அளவிலான தொழிற் திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும்; நிலம் தொடர்பான 59 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 5 மனுக்களும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை கோரி 12 மனுக்களும், சத்துணவு அமைப்பாளர் மற்றும் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 13 மனுக்களும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 18 மனுக்களும், புகார் தொடர்பான 11 மனுக்களும், கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரி 2 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 7 மனுக்களும், பென்சன், நிலுவைத்தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நலவாரியம் தொடர்பான 2 மனுக்களும் மற்றும் 59 இதர மனுக்கள் என மொத்தம் 188 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் கமல்கிஷார். தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மீனாட்சி, மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து