உலமாக்கள் நல வாரிய உறுப்பினர்களின் பதிவை புதுப்பித்தலுக்கு சிறப்பு முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தகவல்

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      விழுப்புரம்

 விழுப்புரம் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக உலமாக்கள் நல வாரிய உறுப்பினர்களின் பதிவை புதுப்பித்தலுக்கு 26.10.2017 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்துள்ளார்.பள்ளிவாசல், தர்காக்கா, மதரஸாக்களில் பணிபுரிவோர், அரசு நலத்திட்ட உதவிகளை பெற, உலமா அடையாள அட்டை அரசால் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், உலமாக்கள் (ம) இதர பணியாளர்கள் நல வாரியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது.  இதன் மூலம் பள்ளிவாசல், தர்கா, மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளோருக்கு இவ்வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் அடையாள அட்டை பெறுவதற்கு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமணம் உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து நிவாரணம், மூக்கு கண்ணாடி ஈடுசெய்ய உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.  உறுப்பினர்களில் பதிவை 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் புதுப்பித்தல் செய்தல் வேண்டும்.உறுப்பினரின் பதிவை புதுப்பித்தலுக்கு 26.10.2017 அன்று காலை 10.30 மணி முதல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலரின் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.   அவ்வமயம் இவ்வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவை உரிய காலத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்துள்ளார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து