முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொகமது அமிர் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர்: விராட்கோலி

திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மெகாமது அமிர் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் என விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக மொகமது அமிர் இருந்து வருகிறார். இவருக்கு லண்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐந்தாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. ஐந்தாண்டு தடைகள் முடிவடைந்து மீண்டும் அணிக்கு திரும்பி விளையாடி வருகிறார். பலவகையில் எதிர்ப்பு கிளம்பிய போது விராட் கோலி அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் முதன்முறையாக கோப்பையை வீழ்த்த காரணமாக இருந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்கத்திலேயே ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் தவானை வீழ்த்தி அசத்தினார்.

இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனாக உள்ள விராட் கோலி உலகில் உள்ள அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார். இந்நிலையில் தான் சந்தித்த தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் மொகமது அமிரும் ஒருவர் என விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘சமீப காலங்களில் பாகிஸ்தான் அணியின் சிறந்த பந்து வீச்சாளராக மொகமது அமிர் விளங்கி வருகிறார். உலகில் உள்ள தலைசிறந்த இரண்டு மூன்று பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சத்திக்க திணறிய பந்து வீச்சாளர்களில் மெகாமது அமிரும் ஒருவர். அவரை எதிர்கொள்ள வேண்டுமென்றால் பேட்ஸ்மேன் அவரது ‘ஏ’ கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மிகச்சிறந்த பந்து வீச்சாளர்.

2016 ஆசியக்கோப்பை தொடரில் மொகமது அமிர் வீசிய பந்து வீச்சை நான் எப்போதும் விரும்புவேன். அவர் பந்து வீசிக்கொண்டிருக்கும்போது நான் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன். அதேபோல் சிறந்த பந்து வீச்சை ஸ்பெல்லை விளையாடியதற்கான நான் மகிழ்ச்சியடைந்தேன். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து